ரஷ்மிகா மந்தான்னா தனது நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பைத் துவங்கியுள்ளார்.
நடிகை ரஷ்மிகா மந்தான்னா பான் இந்தியா நடிகையாக மாறியுள்ளார். கன்னட சினிமாவும் அறிமுகம் ஆன அவர் தெலுங்கு சினிமாவில் பிரகாசமாக ஜொலிக்கத் தொடங்கினார். பின்னர் கார்த்தி உடன் சுல்தான் படம் மூலம் தமிழ் பக்கம் தலை காட்டினார். அதையடுத்து பாலிவுட்டில் சீறிப் பாய்ந்து இந்திய அளவில் ரசிகர்கள் மனதில் வாடகை கொடுக்காமலே குடியேறியுள்ளார்.

தற்போது கதாநாயகியை மையமாக கொண்ட புதிய படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். படத்திற்கு ‘ரெயின்போ‘ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் சாந்த்ரூபன் இயக்குக்கிறார். இவர் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர்.
இந்தப் படத்தை தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபுவின் ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாக இருக்கிறது.
இந்தக் கதையில் முதலில் சமந்தா நடிப்பதாக இருந்தது. ஆனால் தற்போது ரஷ்மிகா இந்தப் படத்தில் இணைந்துள்ளார்.
தற்போது ரஷ்மிகா ரெயின்போ படத்தின் படப்பிடிப்பில் இணைந்துள்ளார். முதல் நாள் படப்பிடிப்பு மிகவும் உற்சாகமாக இருப்பதாகவும் ஒவ்வொரு நிமிடத்தையும் ரசிப்பதாகவும் தெரிவித்துள்ள அவர் படப்பிடிப்பு தள வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.
Day 1 on the sets of #Rainbow 🌈
Lovveddd every bit of today!An update I was looking forward to sharing with all of you 🤗❤️ @ActorDevMohan @Shantharuban87 @justin_tunes @bhaskaran_dop @thamizh_editor #Banglan @prabhu_sr#RainbowFilm pic.twitter.com/ejhkXpVLLt
— Rashmika Mandanna (@iamRashmika) April 7, 2023