நடிகை ராஷ்மிகா மந்தனாவை ஆபாசமாக சித்தரித்து டீப் ஃபேக் வீடியோ வெளியிட்டு பரப்பிய 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
பிரபல நடிகைகளையும், சாதாரண பெண்களையும் போலியாக ஆபசமாக சித்தரித்து இணையத்தில் வீடியோ வெளியிடுவது தற்போது அதிகரித்து வருகிறது. அதிலும், குறிப்பாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடிகை ராஷ்மிகாவை ஆபாசமாக சித்தரித்து போலியாக தயாரிக்கப்பட்ட டீப் ஃபேக் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. டீப் பேக் டெக்னால மூலமா இந்த வீடியோ போலியாக சித்தரிக்கப்பட்டது என்பது தெரியவர, நடிகர் அமிதாப் பச்சன் உட்பட திரைத்துறையில் பலரும் ராஷ்மிகாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். மேலும், இது போன்ற வீடியோ பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் பலரும் வலியுறுத்தினர். மேலும், இது போன்ற ஆபாச வீடியோ வெளியிடுவோர் கைது செய்யப்படுவர் என ஒன்றிய அரசு எச்சரிக்கை விடுத்தது.
இருப்பினும், கடுமையான எச்சரிக்கையை மீறியும் கூட நடிகைகள் கத்ரீனா, கஜோல், அலியா பட் என தொடர்ந்து அடுத்தடுத்து பல நடிகைகள் டீப் பேக் டெக்னாலஜி மூலம் ஆபசமாக சித்தரிக்கப்பட்டனர். அண்மையில் பிரியங்கா சோப்ராவையும் டீப் பேக் தொழில்நுட்பம் கொண்டு வீடியோ வெளியிட்டனர். இதுபோன்ற வீடியோக்கள் தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்துவதாக அனைவரும் தெரிவித்தனர். இதையடுத்து டெல்லி போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதன் விளைவாக இந்த வழக்கை விசாரித்த போலீசார் 4 பேரை கைது செய்துள்ளனர். அவர்கள் தொடர்பான விவரம் வெளியாகவில்லை. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் போலி ஐடியை பயன்படுத்தி இந்த டீப் ஃபேக் வீடியோ வெளியிட்டது தெரியவந்துள்ளது