spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதேர்வெழுதும் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த நடிகை ராஷ்மிகா

தேர்வெழுதும் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த நடிகை ராஷ்மிகா

-

- Advertisement -
இன்று தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு நடிகை ராஷ்மிகா மந்தனா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவை பூர்வீகமாகக் கொண்ட நடிகை ராஷ்மிகா இன்று இந்திய திரையுலகின் முன்னணி இளம் நடிகையாக வலம் வருகிறார். பள்ளி பருவத்திலேயே சினிமாவின் மீது அதிக ஆர்வம் கொண்ட ராஸ்மிகா கல்லூரி படிப்பு முடிந்தவுடன் மாடல் துறையை தேர்வு செய்தார். முன்னணி நிறுவனத்தின் விளம்பரத்தில் மாடலாக பணியாற்றிய ராஷ்மிகா அதன் மூலம் வெளியே பிரபலம அடைந்தார். இதைத்தொடர்ந்து கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் வெற்றி ராசிகாவை தெளிந்த சினிமாவிற்கு அழைத்து வந்தது.

we-r-hiring
தெலுங்கில் விஜய் தேவரகொண்டா உடன் அவர் நடித்த கீதகோவிந்தம் திரைப்படம் மாபெரும் ஹிட் அடித்தது. பின்னர் தமிழில் கார்த்தி நடித்த சுல்தான் படத்தின் மூலம் அறிமுகமானார். அடுத்து வம்சி இயக்கத்தில் விஜய் நடித்த வாரிசு படத்தில் நடித்தார். இதையடுத்து பாலிவுட்டில் குட்பாய் படத்தில் அமிதாப்பச்சனுடன் இணைந்து நடித்தார் ராஷ்மிகா. இப்படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றது. தொடர்ந்து பாலிவுட்டிலும் அவர் முன்னணி நடியாக மாறி இருக்கிறார். இறுதியாக அவரது நடிப்பில் அனிமல் என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது.

தற்போது தமிழ், தெலுங்கில் உருவாகும் ரெயின்போ படத்தில் நடிக்கிறார். தெலுங்கில் உருவாகும் தி கேர்ள் பிரண்ட் படத்தில் நடித்து வருகிறார். மேலும், இந்தியில் ஒரு புதிய படம் என அடுத்தடுத்து பிசியாக அவர் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை ராஷ்மிகா மந்தனா இன்று தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

MUST READ