spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஆதரவற்ற குழந்தைகளை சந்தித்த ரவி மோகன்.... வைரலாகும் வீடியோ!

ஆதரவற்ற குழந்தைகளை சந்தித்த ரவி மோகன்…. வைரலாகும் வீடியோ!

-

- Advertisement -

நடிகர் ரவி மோகன் ஆதரவற்ற குழந்தைகளை சந்தித்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.ஆதரவற்ற குழந்தைகளை சந்தித்த ரவி மோகன்.... வைரலாகும் வீடியோ!

நடிகர் ரவி மோகன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். இவரது நடிப்பில் கடைசியாக காதலிக்க நேரமில்லை திரைப்படம் வெளியாகி ஓரளவிற்கு நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்தது இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் பராசக்தி திரைப்படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். நேற்று (ஜனவரி 29) வெளியான டீசரில் வித்தியாசமான லுக்கில் காண்பிக்கப்பட்டார். எனவே பராசக்தி படத்தில் ரவி மோகனின் வில்லத்தனத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கிடையில் டாடா படத்தின் இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் கராத்தே பாபு திரைப்படத்திலும் நடித்து வருகிறார் ரவி மோகன். மேலும் இவரது நடிப்பில் உருவாகி இருக்கும் ஜீனி போன்ற படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன. இந்நிலையில் ரவி மோகன், ஆதரவற்ற குழந்தைகளை சந்தித்து அவர்களுடன் தனது நேரத்தை செலவழித்துள்ளார்.

we-r-hiring

அதுமட்டுமில்லாமல் அந்த குழந்தைகளுக்கு தன்னால் இயன்ற உதவியையும் செய்துள்ளார். ரவி மோகன் குழந்தைகள் தங்கி உள்ள ஸ்பெஷல் ஹோமிற்கு சென்று அவர்களுடன் நடனமாடி குழந்தைகளை சந்தோஷப்படுத்திய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைக் கண்ட ரசிகர்கள் ரவி மோகனை பாராட்டி வருகின்றனர்.

MUST READ