Homeசெய்திகள்சினிமாராம் சரணின் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியான 'RC 16' பட போஸ்டர்கள்!

ராம் சரணின் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியான ‘RC 16’ பட போஸ்டர்கள்!

-

- Advertisement -

ராம் சரணின் பிறந்தநாள் ஸ்பெஷலாக RC 16 பட போஸ்டர்கள் வெளியாகியுள்ளது.ராம் சரணின் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியான 'RC 16' பட போஸ்டர்கள்!

தெலுங்கு திரை உலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் ராம் சரண். இவரது நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் கேம் சேஞ்சர் திரைப்படம் வெளியானது. சங்கர் இந்த படத்தை இயக்கியிருந்தார். அரசியல் சம்பந்தமான கதைக்களத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதைத்தொடர்ந்து ராம் சரண், புச்சி பாபு சனா இயக்கத்தில் தனது 16வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஏ.ஆர். ரகுமான் இதற்கு இசையமைக்கிறார். இந்த படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடிக்கிறார். வில்லனாக மோகன்பாபு நடிப்பதாக சொல்லப்படுகிறது. மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னதாகவே தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அதன்படி மைசூர், ஐதராபாத் போன்ற பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வந்த நிலையில் டெல்லியில் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடைபெற இருப்பதாக சொல்லப்படுகிறது. ராம் சரணின் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியான 'RC 16' பட போஸ்டர்கள்!இந்நிலையில் ராம் சரணின் பிறந்த நாளான இன்று (மார்ச் 27) இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்திற்கு பெடி என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக வெளியான இரண்டு போஸ்டர்களிலும் ராம் சரண் மிரட்டலான தோற்றத்தில் கட்டப்பட்டுள்ளார். இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ