Homeசெய்திகள்சினிமாபுதிய கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்ட 'ரெட்ரோ' படக்குழு!

புதிய கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்ட ‘ரெட்ரோ’ படக்குழு!

-

- Advertisement -

ரெட்ரோ படக்குழு புதிய கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளது.புதிய கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்ட 'ரெட்ரோ' படக்குழு!

நடிப்பின் நாயகன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் சூர்யாவிற்கு சமீபகாலமாக எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. அந்த வகையில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும் மிகப் பிரம்மாண்டமாகவும் எடுக்கப்பட்டிருந்த கங்குவா திரைப்படமும் அவருக்கு கை கொடுக்கவில்லை. எனவே அடுத்தது சூர்யா ரசிகர்கள் பலரும் கார்த்திக் சுப்பராஜ் இயக்கி இருக்கும் ரெட்ரோ படத்தை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர். காதல் கலந்த ஆக்சன் கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இது தவிர இப்படத்தில் இருந்து வெளியாகும் பாடல்களும் இணையத்தை கலக்கி வருகிறது. ஆகையினால் வருகின்ற மே மாதம் 1ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இந்த படத்தைக் காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

இதற்கிடையில் சமீபத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. தற்போது இந்த விழா தொடர்பான கிளிம்ப்ஸ் வீடியோவை இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான 2D நிறுவனம் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளது. மேலும் சூர்யாவின் 44வது படமாக உருவாகி இருக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார் என்பதும் ஸ்ரேயா கிருஷ்ணா இப்படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

MUST READ