Homeசெய்திகள்சினிமாயுவன் தயாரிப்பில் ரியோ ராஜ் நடிக்கும் 'ஸ்வீட் ஹார்ட்'.... இணையத்தில் வைரலாகும் ட்ரெய்லர்!

யுவன் தயாரிப்பில் ரியோ ராஜ் நடிக்கும் ‘ஸ்வீட் ஹார்ட்’…. இணையத்தில் வைரலாகும் ட்ரெய்லர்!

-

- Advertisement -

யுவன் தயாரிப்பில் ரியோ ராஜ் நடிக்கும் ஸ்வீட் ஹார்ட் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.யுவன் தயாரிப்பில் ரியோ ராஜ் நடிக்கும் 'ஸ்வீட் ஹார்ட்'.... இணையத்தில் வைரலாகும் ட்ரெய்லர்!

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி ஏராளமான ரசிகர்களை சேகரித்தவர் ரியோ ராஜ். இவர் தமிழ் சினிமாவில் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக நடித்த வருகிறார். அந்த வகையில் கடந்த 2023-ல் இவரது நடிப்பில் வெளியான ஜோ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும், மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அது மட்டும் இல்லாமல் ரியோ ராஜுக்கு இப்படம் திருப்புமுனையையும் ஏற்படுத்தி தந்தது. எனவே அதைத்தொடர்ந்து ஆண்பாவம் பொல்லாதது போன்ற பல படங்களில் நடித்து வருகிறார் ரியோ ராஜ். இதற்கிடையில் இவர் யுவன் சங்கர் ராஜாவின் தயாரிப்பில் உருவாகும் ஸ்வீட் ஹார்ட் எனும் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் ஸ்வினீத் எஸ். குமார் இயக்க பாலாஜி சுப்ரமணியம் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இதற்கு இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் ரியோ ராஜுடன் இணைந்து கோபிகா ரமேஷ் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து படமானது வருகின்ற மார்ச் 14ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது.

இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலரும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் இந்த ட்ரைலரை பார்க்கும்போது இன்றைய இளைஞர்களின் மாடன் லவ் குறித்து சொல்வது போன்று தெரிகிறது.

MUST READ