Homeசெய்திகள்சினிமாரசிகர்களை கவரும் 'சொர்க்கவாசல்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

ரசிகர்களை கவரும் ‘சொர்க்கவாசல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

-

- Advertisement -

சொர்க்கவாசல் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.ரசிகர்களை கவரும் 'சொர்க்கவாசல்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

தமிழ் சினிமாவில் நானும் ரெளடிதான் என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஆர் ஜே பாலாஜி. அதைத் தொடர்ந்து இவர் எல்கேஜி, வீட்ல விசேஷம், ரன் பேபி ரன், சிங்கப்பூர் சலூன் என பல படங்களில் ஹீரோவாக நடித்து பெயர் பெற்றுள்ளார். அதே சமயம் இவர், ஏற்கனவே மூக்குத்தி அம்மன் என்ற திரைப்படத்தை இயக்கி ஒரு இயக்குனராகவும் பல்வேறு தரப்பினரிடைய பாராட்டுகளை பெற்றுள்ளார். அடுத்ததாக சூர்யா நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கப் போகிறார் ஆர் ஜே பாலாஜி. இந்த படத்திற்கு சூர்யா 45 என்று தற்காலிகமான தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ரசிகர்களை கவரும் 'சொர்க்கவாசல்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!இந்நிலையில் ஆர்.ஜே. பாலாஜி நடிக்கும் சொர்க்கவாசல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த போஸ்டரை இயக்குனர் பா. ரஞ்சித் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த படத்தினை பா. ரஞ்சித்தின் உதவி இயக்குனர் சித்தார்த் விஸ்வநாத் இயக்குகிறார். இந்த படத்தினை ஸ்வைப் ரைட் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு பிரின்ஸ் ஆண்டர்சன் ஒளிப்பதிவு செய்கிறார். கிறிஸ்டோ சேவியர் இதற்கு இசையமைக்கிறார். ஏற்கனவே இந்த படம் தொடர்பான அப்டேட்டுகள் சமூக வலைதளங்களில் வெளிவந்த நிலையில் தற்போது இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வைரலாகி வருகிறது.

MUST READ