அமெரிக்காவில் ராக்கி பட புகழ் நடிகர் காலமானார்!
ராக்கி பட புகழ் கார்ல் வெதர்ஸ் காலமானார். இவருடைய வயது 76.

ஹாலிவுட் சினிமாவில் கடந்த 1973 ஆம் ஆண்டு வெளியான மேக்னம் ஃபோர்ஸ் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் கார்ல் வெதர்ஸ். அதைத் தொடர்ந்து இவர் ராக்கி என்ற படத்தின் நான்கு பாகங்களிலும் நடித்து புகழ்பெற்றவர். மேலும் அர்னால்டு ஸ்வார்ஸிநேகர் உடன் பிரிடேட்டர் என்ற படத்தில் நடித்திருந்தார். கடந்த 2014 ஆம் ஆண்டு வரை பல படங்களில் நடித்து வந்தவர் கார்ல் வெதர்ஸ். அதன் பின்னர் சிறிய இடைவெளிக்கு பிறகு 2019-ல் வெளியான டாய் ஸ்டோரி 4 என்று அனிமேஷன் படத்தில் குரல் கொடுத்தது மட்டுமல்லாமல் 2019 முதல் 2023 வரை ஒளிபரப்பான டிமாண்டலோரியன் தொடரில் நடித்திருந்தார்.
இந்நிலையில் இவர் லாஸ் ஏஞ்சல்ஸில் இருக்கும் அவரது வீட்டில் தூக்கத்திலேயே இறந்ததாக கூறப்படுகிறது. இதனை அவரது மேலாளர் மேட் ல்யூபர் அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்தார். கார்ல் வெதர்ஸ் – ன் மறைவு திரைப்பட பிரபலங்களை
அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இவரின் இறப்பிற்கு பலரும் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.