இசையமைப்பாளர் சாய் அபியங்கர், சூர்யா 45 படம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார்.
சூர்யாவின் நடிப்பில் சமீபத்தில் ரெட்ரோ திரைப்படம் வெளியானது. அடுத்தது வெங்கி அட்லுரி இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார் சூர்யா. இதற்கிடையில் இவர், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் தனது 45 வது திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க சாய் அபியங்கர் இதற்கு இசையமைக்கிறார். ஜிகே விஷ்ணு இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து திரிஷா, யோகி பாபு, நட்டி நடராஜ், சுவாசிகா மற்றும் பலர் நடிக்கின்றனர். இப்படத்தில் சூர்யா வழக்கறிஞராக நடிக்க ஆர்.ஜே. பாலாஜி இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் விரைவில் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“#Suriya45 Composing is going superb🎶. Gonna do Mass BGM for #Suriya sir, as i have been witnessing him from Childhood🫶. It’ll be a Fan Boy Sambavam😎. I love doing BGM more as I worked with ARRahman & Anirudh previously on that🤝”
– #SaiAbhyankkar pic.twitter.com/z0Bhzwy27a— AmuthaBharathi (@CinemaWithAB) June 3, 2025

அதேசமயம் இந்த படத்திற்கு வேட்டை கருப்பு என்று தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாகவும் பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் பேட்டியில் பேசிய சாய் அபியங்கர் சூர்யா 45 படம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார். அதன்படி அவர், “சூர்யா 45 படத்தின் இசையமைக்கும் பணிகள் சூப்பராக போய்க்கொண்டிருக்கிறது. சூர்யா சாரை சின்ன வயதிலிருந்தே பார்த்துக் கொண்டிருக்கிறேன். இது ஒரு ஃபேன் பாய் சம்பவமாக இருக்கும். ஏ. ஆர்.ரகுமான், அனிருத்துடன் நான் முன்பு வேலை செய்திருப்பதால் எனக்கு பிஜிஎம் பண்றது மிகவும் பிடிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.