- Advertisement -
தெலங்கானாவில் நடிகர் பிரபாஸ் ரசிகர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டியுள்ளனர்.
இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான பாகுபலி தி பிகினிங் திரைப்படம் 650 கோடி வரை வசூலித்து பெரும் வரவேற்பை பெற்றது. அதையடுத்து, 2017-ம் ஆண்டு வெளியான பாகுபலி 2 திரைப்படம் சுமார் ஆயிரத்து 800 கோடி ரூபாய் வசூலித்து இந்தியா சினிமாவை உலகமே திரும்பிப் பார்க்க வைத்தது. அவ்வளவுதான். அதன்பிறகு பிரபாஸ் நடித்த எந்த திரைப்படமும் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை. பிரபாஸ் நடிப்பில் 2019-ம் ஆண்டு வெளியான சாஹோ திரைப்படம் எதிர்மறை விமர்சனங்களை பெற்றது. இதைத் தொடர்ந்து வெளியான ராதே ஷ்யாம் திரைப்படமும் கவிழ்ந்தது. அண்மையில் வௌியான ஆதிபுருஷ் திரைப்படம், வெளியீட்டுக்கு முன்பே எதிர்மறை விமர்சனங்களை பெற்றன.
இந்த சூழலில் மாபெரும் இயக்குநருடன் பிரபாஸ் கூட்டணி அமைத்துள்ள திரைப்படம் சலார். ‘கேஜிஎஃப்’ படத்தின் தாய் பாசத்தை வைத்து சென்டிமென்டாக ஸ்கோர் செய்த பிரசாந்த் நீல், சலார் படத்தில் அதை அப்படியே நட்பாக மாற்றி இருக்கிறார். படத்தில் பிரபாஸ், பிருத்விராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். ஸ்ருதி ஹாசன், பாபி சிம்ஹா, ஜெகபதி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் முன்னோட்டம் மற்றும் முதல் பாடல் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றது.
#Salaar offline theatre(Counter) bookings at Telangana 👀
Fans are getting thrashed by Police !!pic.twitter.com/Z7GRUhoSiC— AmuthaBharathi (@CinemaWithAB) December 19, 2023
