தமிழ் சினிமாவின் முன்னணி நாயகிகளுள் ஒருவர் சமந்தா. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார். நடிகர் நாக சைதன்யா உடன் இவருக்கு நடந்த திருமணம் பின்னர் விவாகரத்தில் முடிந்தது. அதைத்தொடர்ந்து மேலும் பல புதிய படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் சமந்தா. அடிக்கடி ஜிம்முக்கு சென்று ஒர்க் அவுட் செய்து உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்வதில் மிகக் கவனமாக இருப்பார் சமந்தா. இதற்கிடையில் மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சமந்தா சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார். இந்நிலையில் பாட்காஸ்ட் என்னும் இணைய வழியில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து குறித்த கருத்துக்களை பகிர்ந்து வருகிறார். இந்நிகழ்ச்சியில் பிரபல ஊட்டச்சத்து நிபுணரான அல்கேஷ் சரோத்ரி என்பவருடன் இணைந்து தகவல்களை சந்தாதாரர்களுக்கு கூறி வருகிறார். இதனால் இந்த கூகுள் பாட்கேஸ்ட்டில் சமந்தாவை ரசிகர்கள் பலரும் பின்பற்றி வருகின்றனர். அதேசமயம் கல்லீரலில் உள்ள நச்சுக்களை அப்புறப்படுத்துவது பற்றி ஒரு தகவலை பகிர்ந்துள்ளார் சமந்தா.
அவர் கூறியதாவது டேன்டேலியன் என்ற மூலிகை கல்லீரலின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் திறன் வாய்ந்தது என்று கூறியுள்ளார். இதனை மறுத்து பல மருத்துவர்கள் சமந்தாவின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதன்படி பிரபல கல்லீரல் நிபுணரான சிரியாக் அப்பி பிலிப்ஸ் என்பவர் எக்ஸ் தளத்தில் சமந்தா தவறான கருத்துக்களை கூறி தன் ரசிகர்களையும் தன்னை பின் தொடர்பவர்களையும் தவறான வழியில் வழி நடத்துகிறார் என்று பதிவிட்டுள்ளார். தற்போது இந்த பதிவு வைரலாகி வருகிறது.
- Advertisement -