இங்க நான் தான் கிங்கு திரைப்படம் ஓடிடியில் வெளியாகி உள்ளது.
நடிகர் சந்தானம் தற்போது ஹீரோவாக பல படங்களில் தொடர்ந்து பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு சந்தானம் நடிப்பில் டிடி ரிட்டன்ஸ், கிக், 80ஸ் பில்டப் போன்ற படங்கள் வெளியானது. அதைத் தொடர்ந்து 2024 ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் சந்தானம் நடிப்பில் இங்க நான் தான் கிங்கு எனும் திரைப்படம் உருவாகியிருந்த நிலையில் இந்த படமானது கடந்த மே மாதம் 17ஆம் தேதி வெளியானது. இந்த படத்தில் சந்தானத்துடன் இணைந்து பிரியாலயா, தம்பி ராமையா, விவேக் பிரசன்னா, பால சரவணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.இந்த படத்தை விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான இந்தியா பாகிஸ்தான் பட இயக்குனர் ஆனந்த் நாராயணன் இயக்க கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது. டி இமான் படத்திற்கு இசையமைத்திருந்தார். காமெடி கலந்த கதை களத்தில் வெளியான இந்த படம் கிட்டத்தட்ட 30 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் வெற்றி நடை போட்டது. இந்நிலையில் இந்த படம் அமேசான் பிரைமில் வெளியாகி உள்ளது.