பிரசாந்த் நடிப்பில் உருவாகியுள்ள அந்தகன் திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் டாப் ஸ்டார் என்று கொண்டாடப்படுபவர் நடிகர் பிரசாந்த். இவர் 90 காலகட்டத்தில் ரசிகர்களின் ஃபேவரைட் ஹீரோவாக திகழ்ந்தவர். இவருடைய ஜோடி, ஜீன்ஸ், பார்த்தேன் ரசித்தேன், வின்னர் போன்ற பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகின. தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் பிரசாந்த். இதற்கிடையில் தந்தை தியாகராஜன் இயக்கத்தில் அந்தகன் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் இந்தியில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியான அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். கிரைம் திரில்லர் கதைக்களத்தில் வெளியான இந்த படம் அதிக வசூலை வாரி குவித்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இந்நிலையில் இந்த படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த படத்தில் பிரசாந்துடன் இணைந்து சமுத்திரகனி, சிம்ரன், பிரியா ஆனந்த், ஊர்வசி யோகி பாபு, கே எஸ் ரவிக்குமார், மனோபாலா, வனிதா விஜயகுமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தை ஸ்டார் மூவிஸ் நிறுவனத்தின் கீழ் ப்ரீத்தி தியாகராஜன் தயாரித்திருக்கிறார். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். அதே சமயம் அந்தகன் படமானது நீண்ட நாட்களாக ரிலீஸ் ஆகாமல் நிலுவையில் இருந்த நிலையில் தற்போதைய படம் 2024 ஆகஸ்ட் மாதத்தில் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
