விக்னேஷ் சிவன் மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவாகி வருகிற புதிய படத்திற்கு “எல். ஐ. சி” என பெயரிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இது மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி யின் பெயருக்கு களங்கம் விளைவிப்பது போல இருப்பதாகக் கூறி எல்ஐசி நிறுவனம் விக்னேஷ் சிவனுக்கும், தயாரிப்பாளர் சங்கத்துக்கும் நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில் இப்படத்தின் தலைப்பு மாற்றப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது எனத் தகவல்கள் கசிந்துள்ளன. படத்தின் புதிய தலைப்பு கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சர்ப்ரைஸாக இப்படத்தில் சீமான் நடிக்க உள்ளார் என ஏற்கனவே தகவல்கள் கசிந்தன. தற்போது இந்த செய்தி கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. அரசியல் களத்தில் பரபரப்பாக இயங்கி வரும் சீமான் சமீபத்தில் ஒரு சில படங்களில் போலீஸ் அதிகாரி, பொதுநல சேவகர் போன்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இருப்பினும் மாயாண்டி குடும்பத்தார் படத்துக்கு பிறகு இவரை பெரிதாக எந்த ஒரு கமர்சியல் படங்களிலும் பார்க்க முடியவில்லை.
எனவே விக்னேஷ் சிவன் மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவாகும் இந்த புதிய படத்தில் சீமானை எந்த கதாபாத்திரத்தில் காட்டப் போகிறார்கள் என்று மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த புதிய படம் காமெடி கதைக்களமாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. எனவே இப்படத்தில் சீமான் கேமியோ ரோலில் அரசியல்வாதியாகவே வருவாரா அல்லது வேறு ஏதேனும் முக்கியக் கதாபாத்திரமாக இருக்குமா என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
- Advertisement -