இயக்குனர் சீனு ராமசாமி விடுதலை படத்தைப் பாராட்டி பதிவிட்டுள்ளார்.
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் வெளியாகியுள்ள ‘விடுதலை‘ படத்திற்கு அபார வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதியும் ‘வாத்தியார்’ என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
பவானி ஸ்ரீ, கௌதம் மேனன், ராஜீவ் மேனன் உள்ளிட்ட பலரும் படத்தில் சிறப்பாக நடித்திருந்தனர். படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். அவரின் இசை படத்திற்கு பெரிய பக்கபலமாக அமைந்தது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட படத்திற்கு பல தரப்பிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில் தற்போது இயக்குனர் சீனு ராமசாமி படத்தைப் பார்த்துவிட்டு பாராட்டியுள்ளார்.
ஒரு திரைப்படம் கவனம் பெறுவதில்
வணிகம் தாண்டி கலாபூர்வமான
ஒரு நன்மை இருக்கிறது.அந்த நன்மை என்பதுதான் இங்கு சிறப்பானது.
அது நண்பர்
வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தில் நிகழ்ந்திருக்கிறதுஅது தம்பி@sooriofficial -யை
சிறந்த நடிகனாக, நாயகனாக தந்திருக்கிறது.வாழ்த்துகள்.
💐 ❤️ pic.twitter.com/SYImfcYsDj— Seenu Ramasamy (@seenuramasamy) April 15, 2023
“ஒரு திரைப்படம் கவனம் பெறுவதில் வணிகம் தாண்டி கலாபூர்வமான ஒரு நன்மை இருக்கிறது. அந்த நன்மை என்பதுதான் இங்கு சிறப்பானது. அது நண்பர் வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தில் நிகழ்ந்திருக்கிறது அது தம்பி சூரியை சிறந்த நடிகனாக, நாயகனாக தந்திருக்கிறது. வாழ்த்துகள்.” என்று தெரிவித்துள்ளார்.
இரண்டாம் பாகத்தில் இன்னும் சில காட்சிகள் படமாக்கப்பட வேண்டி இருப்பதால் ‘விடுதலை’ படத்தின் அடுத்த பாகம் அடுத்த வருடம் வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.