spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஷாருக்கான், சமந்தா கூட்டணியின் புதிய படம்..... அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது?

ஷாருக்கான், சமந்தா கூட்டணியின் புதிய படம்….. அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது?

-

- Advertisement -
kadalkanni

நடிகர் ஷாருக்கான் பாலிவுட் சினிமாவில் மிகப்பெரிய ஸ்டார் நடிகராக வலம் வருபவர். அது மட்டும் இல்லாமல் இவர் பாக்ஸ் ஆபீஸ் கிங்காக கொண்டாடப்படுகிறார். ஷாருக்கான், சமந்தா கூட்டணியின் புதிய படம்..... அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது?அந்த வகையில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான பதான், ஜவான், டங்கி போன்ற படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த மூன்று படங்களுமே கிட்டத்தட்ட 500, 1000 கோடி என தனித்தனியாக வசூல் வேட்டை நடத்தியது. அடுத்ததாக ஜவான் படத்தை தொடர்ந்து மீண்டும் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கப் போகிறார் என்று சொல்லப்பட்டது. ஆனால் சமீபத்தில் வெளியான தகவல் என்னவென்றால் தங்கி படத்தின் இயக்குனர் ராஜ்குமார் ஹிராணிடன் ஷாருக்கான் மீண்டும் கூட்டணி அமைக்கப் போவதாக சொல்லப்படுகிறது. அதேசமயம் இந்த படம் தேசப்பற்றை மையமாக கொண்ட அதிரடி ஆக்சன் படமாக உருவாக இருப்பதாகவும் இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை சமந்தா நடிக்க போவதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.ஷாருக்கான், சமந்தா கூட்டணியின் புதிய படம்..... அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது? இந்நிலையில் இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நிலையில் புதிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு 2024 ஆகஸ்ட் 15-ல் வெளியாகும் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த படம் தேசப்பற்று கதைக்களத்தில் இருப்பதால் 2025 ஆகஸ்ட் மாதத்திற்குள் படத்தை முடித்துவிட்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு படத்தை வெளியிடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ