spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபரத நாட்டியமாடும் திரிஷா.... மறைந்து பார்த்த சிம்பு.... 'தக் லைஃப்' பட அப்டேட்!

பரத நாட்டியமாடும் திரிஷா…. மறைந்து பார்த்த சிம்பு…. ‘தக் லைஃப்’ பட அப்டேட்!

-

- Advertisement -

மணிரத்னம் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தான் தக் லைஃப். இந்த படத்தில் கமல்ஹாசன், சிம்பு , திரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, கௌதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், அபிராமி, நாசர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.பரத நாட்டியமாடும் திரிஷா.... மறைந்து பார்த்த சிம்பு.... 'தக் லைஃப்' பட அப்டேட்! கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க ஏ ஆர் ரகுமான் இதற்கு இசையமைக்கிறார். இந்த படத்தில் கமலுக்கு மகனாக சிம்பு நடிக்க சிம்புவிற்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. மேலும் பேட்ச் ஒர்க் பணிகள் மட்டும் தற்போது நடைபெற இருப்பதாக சொல்லப்படுகிறது. அடுத்தது இந்த படமானது 2025 ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என தொடர்ந்து சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. பரத நாட்டியமாடும் திரிஷா.... மறைந்து பார்த்த சிம்பு.... 'தக் லைஃப்' பட அப்டேட்!இதற்கிடையில் சமீபத்தில் மும்பையில் சிம்பு மற்றும் திரிஷா ஆகிய இருவருக்கும் இடையிலான காட்சி ஒன்று படமாக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின்றன. அதன்படி திரிஷா பரத நாட்டியமாடுவதை சிம்பு மறைந்திருந்து பார்ப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டுள்ளதாம். இது சிம்பு மற்றும் திரிஷா இருவருக்குமான காதல் பாடல் காட்சியாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. மேலும் மற்ற அப்டேட்டுகள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ