spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபாடகி கல்பனாவின் தற்கொலை முயற்சி.... கைது செய்யப்பட்ட கணவர்!

பாடகி கல்பனாவின் தற்கொலை முயற்சி…. கைது செய்யப்பட்ட கணவர்!

-

- Advertisement -

பாடகி கல்பனாவின் தற்கொலை முயற்சி சம்பவத்தில் அவருடைய கணவர் கைது செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.பாடகி கல்பனாவின் தற்கொலை முயற்சி.... கைது செய்யப்பட்ட கணவர்!

பாடகி கல்பனா தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஏகப்பட்ட பாடல்களை பாடி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். மேலும் கல்பனா ஐதராபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த சில வருடங்களாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக கல்பனாவின் வீடு திறக்கப்படாமல் இருக்க சந்தேகம் அடைந்த காவலாளி உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் விரைந்து வந்த போலீசார் கல்பனாவின் வீட்டு கதவை உடைத்து பார்த்தபோது அவர் சுயநினைவின்றி இருந்துள்ளார். அதாவது பாடகி கல்பனா தன்னுடைய வீட்டில் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்திருப்பதாக தகவல் வெளியானது. எனவே உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கல்பனாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாடகி கல்பனாவின் தற்கொலை முயற்சி.... கைது செய்யப்பட்ட கணவர்!அதன்படி அவர் அபாய கட்டத்தை தாண்டி இருப்பதாகவும் நலமுடன் இருப்பதாகவும் அவருக்கு வென்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் கல்பனாவின் தற்கொலை முயற்சி வழக்கில் அவருடைய கணவர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இது தொடர்பான விசாரணையில் கல்பனாவின் கணவர் இரண்டு நாட்களாக தான் வீட்டில் இல்லை என்று கூறியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

MUST READ