கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் சர்தார் 2. கடந்த 2022 ஆம் ஆண்டு பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் வெளியான சர்தார் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று வெற்றி படமாக அமைந்தது. இந்த படத்தில் கார்த்தி, லைலா, ராஷி கண்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். கார்த்தி இந்த படத்தில் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். படமானது ஸ்பை திரில்லர் ஆக்சன் படமாக வெளியாகி இருந்தது. இந்நிலையில் அடுத்ததாக பிஎஸ் மித்ரன், கார்த்தி கூட்டணியில் உருவாகும் சர்தார் 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. மேலும் படத்தின் எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தும் வகையில் எஸ் ஜே சூர்யாவும் படத்தில் இணைந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பாக இந்த படத்தின் பூஜை நடந்த நிலையில் அதைத்தொடர்ந்து படத்தின் ப்ரோமோ தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டன. விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இதற்கிடையில் இந்த படத்தில் கதாநாயகியாக ஆஷிகா ரங்கநாத் நடிக்கப் போவதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது. அதைத்தொடர்ந்து தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு சிவகார்த்திகேயனின் டாக்டர், டான் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த பிரியங்கா அருள் மோகன் மற்றும் மாஸ்டர், தங்கலான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள மாளவிகா மோகனன் ஆகிய இருவரிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் இருவரில் யாரேனும் ஒருவர் கதாநாயகியாக நடிப்பார் எனவும் சொல்லப்படுகிறது. எனவே இனிவரும் நாட்களில் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.