நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராக மட்டுமல்லாமல் பாடகராகவும் பாடல் ஆசிரியராகவும் தயாரிப்பாளராகவும் பலம் வருகிறார். பல ஹிட் பாடல்களை எழுதி பாடியிருக்கும் சிவகார்த்திகேயன் தொடர்ந்து படங்களை தயாரித்தும் வருகிறார். அந்த வகையில் கொட்டுக்காளி எனும் திரைப்படத்தை தயாரித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். விடுதலை, கருடன் ஆகிய படங்களுக்கு பிறகு இந்த படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார் சூரி. படத்தை பிஎஸ் வினோத் ராஜ் இயக்கியிருக்கிறார். இவர் கூழாங்கல் எனும் திரைப்படத்தை இயக்கி பல்வேறு தரப்பினரிடையே பாராட்டுகளை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் அடுத்ததாக இயக்கியுள்ள கொட்டுக்காளி திரைப்படமும் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பார்வையாளர்களின் பாராட்டுகளை பெற்று வருகிறது.
திரைப் பிரபலங்கள் பலரும் படத்தை பாராட்டி வருகின்றனர். எனவே ரசிகர்களும் வருகின்ற ஆகஸ்ட் 23 ல் இந்த படத்தை திரையரங்குகளில் காண மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்ற நிலையில் படக்குழுவினர் பலரும் விழாவில் கலந்துகொண்டு படம் குறித்து பேசி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் கொட்டுக்காளி படத்தின் இயக்குனர் குறித்து பேசி உள்ளார். அவர் பேசியதாவது,
“I have produced #Kottukkaali to celebrate director VinothRaj, i didn’t even hear the story🤝. If this film becomes Profit, I will introduce many new talents like him👏. This is my service to cinema, as you made me as a star🌟❤️”
– #Sivakarthikeyan pic.twitter.com/vZKIYhsgp1— AmuthaBharathi (@CinemaWithAB) August 13, 2024
“கூழாங்கல் என்று அற்புதமான படத்தை தந்ததற்காக வினோத் ராஜை கொண்டாட வேண்டும் என்பதற்காக தான் கொட்டுக்காளி படத்தை தயாரித்திருக்கிறேன். கதைக்காக என்பதை தாண்டி அவரை கொண்டாட வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக தான் இந்த படத்தை தயாரித்தேன். அவரிடம் கதையைக் கேட்கவேவில்லை. உங்களுக்கு என்ன எடுக்கணும் தோணுதோ அதை எடுங்கன்னு சொன்னேன். இந்த படத்திலிருந்து லாபம் வந்தால் இவரை போல் பல புதிய திறமைசாலிகளை அறிமுகப்படுத்துவேன். எனக்கு வாழ்க்கை கொடுத்த இந்த சினிமாவிற்கு முடிந்த சேவை இது” என்று பேசியுள்ளார்.