சிவகார்த்திகேயன் நடிக்கும் அமரன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக அயலான் திரைப்படம் வெளியாகி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தது.தற்போது சிவகார்த்திகேயன் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் SK23 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் இவர், ரங்கூன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனது 21வது திரைப்படத்தில் நடிக்கும் முடித்துள்ளார். இந்த படத்திற்கு அமரன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க ஜிவி பிரகாஷ் படத்திற்கு இசையமைத்துள்ளார். ராணுவத்தின் பின்னணியில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்திருக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து தற்போது டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் அடுத்தடுத்த போஸ்டர்களும் டீசரும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் சமீபத்தில் இப்படமானது வருகின்ற அக்டோபர் 31 தீபாவளி தினத்தன்று வெளியாக இருப்பதாக படக்குழுவினர் சார்பில் அறிவிக்கப்பட்டது. எனவே வருகின்ற ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு அமரன் படம் தொடர்பான ஏதாவது அப்டேட் வெளியாகுமா? என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதன்படி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் ஆகஸ்ட் 15-ல் வெளியாகும் என்று நம்பப்படுகிறது. இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.