சிவகார்த்திகேயன் மடோனா அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இப்படம் அடங்க ஜூன் 14ஆம் தேதி வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இதை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தனது 21 வது படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் காஷ்மீர் பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்கிறார். வில்லனாக ராகுல் போஸ் நடிக்கிறார். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் SK21 படத்தை தயாரித்து வருகிறது.ஜிவி பிரகாஷ் இதற்கு இசை அமைக்கிறார்.


மேலும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ அதிகாரியாக நடித்து வருகிறார். அதாவது 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய ராணுவத்தில் மேஜராக இருந்து ஜம்மு காஷ்மீரில் நடந்த ஒரு தாக்குதலில் துணிச்சலாக செயல்பட்டு இந்தியா முழுவதும் புகழப்பட்ட ஒரு இளம் ராணுவ வீரரின் வாழ்க்கையை மையமாக வைத்து படம் உருவாகி வருகிறது. அதனால் தனது தோற்றம் தெரிந்து விடக்கூடாது என்று தலையில் தொப்பி போட்டுக் கொண்டு வலம் வருகிறார். மேலும் இந்த படம் சிவகார்த்திகேயனின் கேரியரில் மிக முக்கியமான படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த படம் சம்பந்தமான அறிவிப்பு வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகும் என்று தகவல்கள் கசிந்துள்ளது. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


