தென்னிந்திய திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் ஒரு சிறந்த நடிகர் மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், பாடகர் என பன்முகத் திறமைகள் உடையவர். இவ்வாறாக சின்னத்திரையில் அறிமுகமாகி தன் திறமைகளினால் வெள்ளி திரைக்கு பயணம் செய்து தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார்.
தற்போது மிகப்பெரிய அளவில் பிரபலம் அடைந்துள்ள சிவகார்த்திகேயன் தந்தையின் 70வது பிறந்த தினத்தை முன்னிட்டு ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அந்தப் பதிவு அவரது அட்மினால் வெளியிடப்பட்டிருக்கிறது.

அந்தப் பதிவில்,
நடிகர் சிவகார்த்திகேயனின் அப்பா என்று சொல்வதைவிட, ஜி தாஸ் அவர்களின் மகன் சிவகார்த்திகேயன் என்று சொல்வதுதான் பேரழகு. மேல புகைப்படத்தில் இருக்கும் நபர் டைரி நிகழ்ச்சியில் என்னிடம் அவரின் கதைகளை கதைத்தார் அந்த நபர் என்னிடம் சொல்லிய பெயர் ஜி தாஸ் கோயம்புத்தூர் மத்திய சிறைச்சாலையில் ஜி. தாஸ் அவர்கள் சூப்பரண்டாக பணிபுரிந்த பொழுது சிறைவாசிகள் மனதில் தேசிய கீதமாய் திகழ்ந்தார். என்னிடம் கதை சொன்ன நபர் கோவத்தினால் ஒரு செயலை செய்து சிறை வாசத்தை அனுபவித்தார். சிறைக்கு அவர் செல்லும் பொழுது படிப்பு வாசம் அவரிடம் இல்லை ஆனால் விடுதலையான பிறகு அந்த நபர் வெளியில் வரும் பொழுது முதுகலை பட்டம் பெற்றிருந்தார் அதற்கு காரணம் ஜி தாஸ் அவர்கள். சிறைப்பறவைகளை என்றும் அடிக்கக்கூடாது. சிறைப்பறவைகளுக்கு நல்ல உணவும் நீரும் கொடுக்க வேண்டும் சிறைப்பறவைகளுக்கு கல்வியை புகுத்த வேண்டும் இவை அனைத்தையும் செய்தார் ஜி தாஸ். எல்லா தவறுகளுக்கும் இங்கு மன்னிப்பு உண்டு. அந்த மன்னிப்போடு அன்பையும் கருணையும் அள்ளிக் கொடுத்தார். சிறையில் இருக்கும் நபர்களின் குடும்பத்தில் ஏதேனும் கஷ்டம் கல்வி மருத்துவ செலவுக்கு பணம் தேவைப்பட்டால் அவர்கள் குடும்பத்துக்கு தன் சொந்த பணத்தை கொடுத்து உதவுவார். இதற்கு சாட்சி அந்தியூர் அன்புராஜ் அண்ணா” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த பதிவுடன் சிவகார்த்திகேயனின் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் இணைக்கப்பட்டுள்ளது.
அதில் சிவகார்த்திகேயன் தனது தந்தையைப் பற்றி” அப்பா…. தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் உங்கள் முன்னே
நான் இன்று என்ன செய்தாலும் அது உங்களால் தான். நீங்கள் வாழ்ந்த விதத்தை பார்த்து தான் நம் கையில் இருப்பதை மற்றவர்களுக்கு கொடுத்து உதவ வேண்டும் என்று நான் கற்றுக் கொண்டேன். எப்பொழுதும் உங்கள் பெருமைமிகு மகனாக இருப்பேன். நீங்கள் எப்போதும் நினைவு கூறப்படுவீர்கள் அப்பா” என்று பதிவிட்டுள்ளார்.
இந்த உருக்கமான பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.