spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஜெயம் ரவியின் இறைவனுக்கு வந்த சோதனை.... வெட்டி நீக்கப்பட்டுள்ள காட்சிகள்!

ஜெயம் ரவியின் இறைவனுக்கு வந்த சோதனை…. வெட்டி நீக்கப்பட்டுள்ள காட்சிகள்!

-

- Advertisement -

ஜெயம் ரவி ,நயன்தாரா நடிப்பில் ‘இறைவன்’ திரைப்படம் சில நாட்களுக்கு முன்னர் திரையரங்குகளில் வெளியாகியது. வாமனன், என்றென்றும் புன்னகை, மனிதன் போன்ற படங்களை இயக்கிய அகமது படத்தை இயக்கியிருந்தார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் படம் ரசிகர்களை திருப்திப்படுத்த தவறிவிட்டது. பார்த்து பழகிப்போன சைக்கோ திரில்லர் படம் பார்வையாளர்களுக்கு அலுப்பை ஏற்படுத்தி தோல்வி பாதையை தேடிக்கொண்டது. தொழில்நுட்ப ரீதியாக ஸ்ட்ராங்கான படமாக இருந்த போதிலும் வித்தியாசமான திரைக்கதையை எதிர்பார்த்து சென்றவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. படத்தைப் பற்றி விமர்சனங்களும் கலவையாக வந்ததால் அடுத்தடுத்த நாட்களில் படத்தின் வசூலும் கணிசமாக குறைய தொடங்கியது. படத்தில் தேவையில்லாத காட்சி அமைப்புகள் நிறைய இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் தான் படக்குழு ஒரு மாற்றத்தை செய்து படத்தை வெளியிட்டுள்ளனர். 14 நிமிட காட்சிகளை படக்குழு நீக்கியுள்ளனர். இது படத்தின் நீளத்தை சற்று குறைத்துள்ளதால் ரசிகர்களை கவரும் என்ற ரீதியில் காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன.

MUST READ