Homeசெய்திகள்சினிமாஅக்ஷய் குமார், சுதா கொங்கரா கூட்டணியின் சூரரைப் போற்று இந்தி ரீமேக்........... ரிலீஸ் தேதியில் மாற்றம்!

அக்ஷய் குமார், சுதா கொங்கரா கூட்டணியின் சூரரைப் போற்று இந்தி ரீமேக்……….. ரிலீஸ் தேதியில் மாற்றம்!

-

- Advertisement -

நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2020 ஆம் ஆண்டு சூரரை போற்றி திரைப்படம் அமேசான் பிரைம் ஓ டி டி தளத்தில் வெளியானது. இந்த படம் இந்தியாவின் மளிகை வானூர்தி சேவையை தொடங்க நினைத்து அதில் வெற்றியும் பெற்ற திரு கோபிநாத் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது. இந்த படத்தை சுதா கொங்கரா இயக்கியிருந்தார். 2D என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் சூர்யா தயாரித்த இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். இந்த படம் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த படத்தை இயக்குனர் சுதா கொங்கரா ஹிந்தியில் ரீமேக் செய்து வருகிறார். இதில் அக்ஷய் குமார் கதாநாயகனாக நடிக்கிறார். ராதா மதன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இப்படத்தில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் சரத்குமார் இணைந்துள்ளதாகவும் சமீபத்தில் செய்திகள் வெளியானது. ஸ்டார்ட் அப் என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த படம் வருகின்ற செப்டம்பர் 1ஆம் தேதி திரைக்கு வரும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது ஒரு சில காரணங்களால் இதன் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டு அடுத்த ஆண்டு பிப்ரவரி 16 இல் ரிலீஸ் ஆகும் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

MUST READ