சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடிக்கும் கொட்டுக்காளி படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியாக உள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் நடிகராகவும் பாடகராகவும் பாடல் ஆசிரியராகவும் வலம் வருகிறார். அத்துடன் இவர் தயாரிப்பாளராகவும் உருவெடுத்து பல படங்களை தனது எஸ்கே ப்ரோடுக்ஷன்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்து வருகிறார். அந்த வகையில் சூரி நடிப்பில் உருவாகியுள்ள கொட்டுக்காளி எனும் திரைப்படத்தையும் சிவகார்த்திகேயன் தான் தயாரித்திருக்கிறார். இந்த படத்தை கூழாங்கல் படத்தின் இயக்குனர் பி எஸ் வினோத் ராஜ் இயக்குகிறார். இதில் சூரியுடன் இணைந்து அன்னா பென் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சூரி இந்த படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதேசமயம் இந்த படமானது ரிலீஸுக்கு முன்பே பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பார்வையாளர்களிடம் பாராட்டுகளை பெற்று வருகிறது.
An update on the much-acclaimed #Kottukkaali will be out tomorrow at 5 PM.@Siva_Kartikeyan @KalaiArasu_ @SKProdOffl #soori @PsVinothraj @benanna_love @sakthidreamer @thecutsmaker @valentino_suren @alagiakoothan @Raghav4sound @promoworkstudio @kabilanchelliah @ragulparasuram… pic.twitter.com/bSWtejNYBE
— Actor Soori (@sooriofficial) July 22, 2024
இந்நிலையில் கடந்த சில தினங்களாகவே இந்த படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் வெளியாக இருப்பதாக தொடர்ந்து சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. இந்நிலையில் இந்த படம் தொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்று இன்று (ஜூலை 23) மாலை 5 மணி அளவில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


