சூரி நடிக்கும் மாமன் படத்தின் முழு ஆல்பம் வெளியாகியுள்ளது.
நடிகர் சூரி தற்போது தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த வகையில் இவர்கள் நடிப்பில் கடைசியாக விடுதலை 2 திரைப்படம் வெளியானது. அதேசமயம் மண்டாடி எனும் திரைப்படத்தையும் கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையில் இவர் விலங்கு வெப் தொடரை இயக்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமான பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் மாமன் எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தில் சூரியுடன் இணைந்து ராஜ்கிரண், ஐஸ்வர்யா லக்ஷ்மி, சுவாசிகா, பால சரவணன், கீதா கைலாசம் மற்றும் பலர் நடித்துள்ளனர். தாய்மாமன் மற்றும் மருமகனுக்கு இடையிலான பாசப்பிணைப்பை மையமாக வைத்து குடும்ப பொழுதுபோக்கு பின்னணியில் எடுக்கப்பட்டுள்ளது.
#Maaman – Full album is out now..⭐ Film releasing on May 16th in Theatres..🤝 Looking Forward..✌️
Link: https://t.co/ebZ6SVVnXC pic.twitter.com/iAakGxmwrH
— Laxmi Kanth (@iammoviebuff007) May 10, 2025
இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்த நிலையில் வருகின்ற மே 16ஆம் தேதி படம் திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. அதன்படி படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதற்கிடையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் முழு ஆல்பமும் வெளியாகி இருக்கிறது.
மேலும் மாமன் திரைப்படத்தை லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க ஹேஷம் அப்துல் வாகப் இசையமைத்துள்ளார். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.