spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஆக்ரோஷமான தோற்றத்தில் சூரி.... இணையத்தில் வைரலாகும் 'மண்டாடி' பட புதிய போஸ்டர்!

ஆக்ரோஷமான தோற்றத்தில் சூரி…. இணையத்தில் வைரலாகும் ‘மண்டாடி’ பட புதிய போஸ்டர்!

-

- Advertisement -

மண்டாடி படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது.ஆக்ரோஷமான தோற்றத்தில் சூரி.... இணையத்தில் வைரலாகும் 'மண்டாடி' பட புதிய போஸ்டர்!

சூரி நடிப்பில் கடைசியாக விடுதலை 2 திரைப்படம் வெளியானது. அதைத்தொடர்ந்து வருகின்ற மே 16ஆம் தேதி மாமன் திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் சூரி, மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் மண்டாடி எனும் திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த படமானது படகு போட்டி சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகிறது. இதில் நடிகர் சூரி வேறொரு பரிமாணத்தில் மிரட்டலான தோற்றத்தில் நடிக்கிறார். இவருடன் இணைந்து சுகாஸ், சத்யராஜ், மகிமா நம்பியார் மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த படத்தை ஆர் எஸ் இன்ஃபோடைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்க ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ஆக்ரோஷமான தோற்றத்தில் சூரி.... இணையத்தில் வைரலாகும் 'மண்டாடி' பட புதிய போஸ்டர்!தற்போது இந்த படத்தின் தெலுங்கு போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த போஸ்டரில் நடிகர் சூரி ஆக்ரோஷமான தோற்றத்தில் காணப்படுகிறார். இதனை பார்க்கும்போது சூரி இதுவரை நடித்திருந்த மற்ற படங்களைப் போல் அல்லாமல் இந்த படத்தில் ரக்கடான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது போல் தெரிகிறது. மேலும் நடிகர் சுகாசின் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் எதிர்பார்ப்புகளும் அதிகமாகியுள்ளன.

MUST READ