- Advertisement -
74வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வாகி இருக்கும் கொட்டுக்காளி திரைப்படம் வரும் 16-ம் தேதி திரையிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். அவரது நடிப்பில் இறுதியாக வெளியான அயலான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. நடிப்பு மட்டுமன்றி தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் தொடங்கிய சிவகார்த்திகேயன், சிறந்த கதைகளை தேர்வு செய்து தயாரித்து வருகிறார். இதுவரை 5 திரைப்படங்களை சிவகார்த்திகேயன் தயாரித்து உள்ளார். இந்நிலையில், தற்போது அவரது தயாரிப்பில் உருவாகியிருக்கும் புதிய திரைப்படம் தான் கொட்டுக்காளி.


இப்படத்தில் பிரபல நடிகர் சூரி நாயகனாக நடிக்கிறார். மலையாள நட்சத்திரம் அன்னா பென் நாயகியாக நடித்துள்ளார். ‘கூழாங்கள்’ படத்தின் மூலம் பல்வேறு நாடுகளுக்கு சென்று சர்வதேச விருதுகளை வாங்கிய பி.எஸ் வினோத் ராஜ் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வந்தன. இதனிடையே, , 74வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவின் பிரத்யேக திரையிடலுக்கு கொட்டுக்காளி திரைப்படம் முதல் தமிழ் படமாக தேர்வானது என முன்னரே அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக படத்தின் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயனும் அறிக்கை வெளியிட்டிருந்தார்



