spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாரஜினி நலம்பெற வேண்டி சௌந்தர்யா பிரார்த்தனை

ரஜினி நலம்பெற வேண்டி சௌந்தர்யா பிரார்த்தனை

-

- Advertisement -

ரஜினி நலம்பெற வேண்டி சௌந்தர்யா பிரார்த்தனை

ரஜினி நலம்பெற வேண்டி மனமுருகி  மகள் சௌந்தர்யா பிரார்த்தனை செய்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்தின் உடல் நிலை சீராக உள்ளது எனவும், இரு நாட்களில் அவர் வீடு திரும்புவார் எனவும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. இதனால் ரஜினிகாந்த் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் எதிபார்த்த நிலையில், அவர் நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் விரைவில் நலம்பெற வேண்டி அவரது மகள் சௌந்தர்யா சாமி தரிசனம் செய்தார். இன்று காலை சென்னையில் உள்ள வடிவுடையம்மன் கோயிலில் ரஜினிகாந்த் பெயரில் சிறப்பு பூஜையுடன் வழிபாடு நடத்தினார்.

சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்க மறுத்த லோகேஷ் கனகராஜ்….. பிரபல நடிகரிடம் பேச்சு வார்த்தை!

we-r-hiring

உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 30ஆம் தேதி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஜினிக்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ