நடிகை ஜோதிகா தென்னிந்திய சினிமாவில் ஆணாதிக்கம் நிறைந்துள்ளது எனக் கூறியுள்ளார்.
நடிகை ஜோதிகா தமிழ் சினிமாவில் எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் வெளியான வாலி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். அதை தொடர்ந்து இவர் பூவெல்லாம் கேட்டுப்பார், தெனாலி, பேரழகன், காக்க காக்க என பல வெற்றி படங்களில் நடித்து ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர். அதே சமயம் நடிகர் சூர்யாவை கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர், திருமணத்திற்கு பிறகு சில காலங்கள் சினிமாவை விட்டு விலகி இருந்தார். பின்னர் 36 வயதினிலே படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்து ஜாக்பாட், காற்றின் மொழி என தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் தற்போது தமிழ் மட்டுமல்லாமல் இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் இவர் நடித்திருந்த டப்பா கார்டெல் என்ற வெப் தொடர் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் நடிகை ஜோதிகா சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், “தென்னிந்திய சினிமாவில் ஆணாதிக்கம் நிறைந்துள்ளது.
#Jyothika north is not a male dominated industry 😅😂pic.twitter.com/9QDEJFffDs
— VRsamy (@Veerasamy100) March 8, 2025
அதாவது தென்னிந்திய சினிமாவில் ஆண்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள்தான் அதிகமாக உருவாகி வருகின்றன. கதாநாயகிகளை பாடல்களுக்கு நடனம் ஆடவும், கதாநாயகர்களை புகழ்ந்து பேசுவதற்கும் மட்டுமே பயன்படுத்துகின்றனர். அது இப்பொழுதும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இதனாலேயே நான் பல படங்களை வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். இருப்பினும் சில நல்ல கதாபாத்திரங்கள் எனக்கு கிடைத்தன. . மேலும் வட இந்திய சினிமாவில் ஆணாதிக்கம் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே நடிகை நித்யா மேனன் பெண்களுக்கு எல்லா துறைகளிலும் இரண்டாவது இடம்தான் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.