Homeசெய்திகள்சினிமாபிரபல கொரியன் பாப் பாடகி மரணம்... ரசிகர்கள் அதிர்ச்சி...

பிரபல கொரியன் பாப் பாடகி மரணம்… ரசிகர்கள் அதிர்ச்சி…

-

- Advertisement -
தென்கொரிய பாப் பாடகி பார்க் போ ராம் என்பவர், திடீரென உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொரியன் படைப்புகள் கொரியா, வௌிநாடுகள் மட்டுமன்றி இந்தியா உள்பட உலகம் முழுவதும் மிகவும் பிரபலம் அடைகின்றன. கொரியன் பாடல்கள், கொரியன் வெப் தொடர்கள், கொரியன் திரைப்படங்கள் என அனைத்திற்குமே உலகம் முழுவதிலும் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்த வகையில் தென் கொரியாவைச் சேர்ந்த பிரபல பாப் பாடகி பார்க் போ ராம். பாப் பாடல்களால் ரசிகர்களை கவர்ந்த பார்க், கடந்த 10 ஆண்டுகளாக XANADU என்ற இசை நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

தென் கொரியாவில் மிகவும் பிரபலமான நட்சத்திரமாக வலம் வரும் இவர், கடந்த 11-ம் தேதி அன்று உயிரிழந்துள்ளார். இருப்பினும் இந்த தகவலை XANADU நிறுவனம் தற்போது தான் உறுதிப்படுத்தி உள்ளது. அவருக்கு வயது 30. இறப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன்பாக அவர், நண்பர்களுடன் இணைந்து மது அருந்தியிருக்கிறார். இதைத் தொடர்ந்து கழிவறைக்குச் சென்ற அவர், சுயநினைவு இல்லாமல் கிடந்துள்ளார். இதைக் கண்ட அவரது நண்பர்கள், மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கின்றனர். இருப்பினும் அவர் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார்.

 

பார்க் போ ராமின் மறைவுச் செய்தி, தென் கொரிய இசை பாடகர்கள் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சி ஆழ்த்தியுள்ளது. மேலும், அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதால், போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

MUST READ