நடிகர் சிம்பு அடுத்ததாக தனது 48வது படத்தில் நடிக்க இருக்கிறார். தற்காலிகமாக STR48 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இந்தப் படத்தை இயக்குகிறார். இது சம்பந்தமான அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி இருந்தது. அதைத்தொடர்ந்து நடிகர் சிம்பு படத்திற்காக தீவிர உடற்பயிற்சியை மேற்கொண்டார். சமீபத்தில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பட குழுவினர் வெளியிட்டிருந்தனர். மேலும் படத்தில் நடிகர் சிம்பு இரட்டை வேடங்களில் நடிப்பதாகவும், தானே வில்லனாகவும் தானே ஹீரோவாகவும் நடிக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது. அதில் வில்லனாக நடிக்கும் கதாபாத்திரத்தில் சிம்பு, திருநங்கை வேடத்தில் நடிக்கிறார் என்றும் செய்திகள் வெளியாகி வருகின்றன. அதே சமயம் இந்த படம் பீரியாடிக் படமாக உருவாக இருக்கிறதாம். இவ்வாறு பல தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வந்த போதிலும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய பாடில்லை.
STR48 படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாத இறுதியில் தொடங்க இருப்பதாக புறப்பட்ட நிலையில் நடிகர் சிம்புவும் துபாயிலிருந்து சென்னைக்கு வந்தார். ஆனால் தற்போது வரை படத்தில் முன் தயாரிப்பு பணிகள் மட்டுமே நடைபெற்று வருவதால் சிம்பு அப்செட் ஆகி மீண்டும் துபாய்க்கே சென்று விட்டாராம். ஆகவே பட குழுவினர் படத்தின் முன் தயாரிப்பு பணிகள் போன்ற மற்ற பணிகளை முடித்துவிட்டு விரைவில் படப்பிடிப்பை தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- Advertisement -