Homeசெய்திகள்சினிமாஅரைத்த மாவையே அரைத்தாரா சுந்தர். சி?....'அரண்மனை 4' பட விமர்சனம் இதோ!

அரைத்த மாவையே அரைத்தாரா சுந்தர். சி?….’அரண்மனை 4′ பட விமர்சனம் இதோ!

-

- Advertisement -

அரண்மனை 4 படத்தின் திரைவிமர்சனம்அரைத்த மாவையே அரைத்தாரா சுந்தர். சி?....'அரண்மனை 4' பட விமர்சனம் இதோ!

சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை படத்தின் மூன்று பாகங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இன்று அரண்மனை 4 திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. சுந்தர் சி யின் தங்கையாக நடிகை தமன்னா நடித்துள்ளார். இவர் சந்தோஷ் பிரதாப்பை காதலித்து திருமணம் செய்து தனியாக வாழ்ந்து வருகிறார். திடீரென சந்தோஷ் பிரதாப் மற்றும் தமன்னா மர்மமான முறையில் இறந்து விடுகின்றனர். இந்த தகவல் அறிந்த சுந்தர் சி தனது தங்கையின் மரணத்திற்கான காரணத்தை கண்டறியும் முயற்சியில் ஈடுபடுகிறார். அதன்பின் நடக்கும் சுவாரசியமான விஷயங்கள் தான் படத்தில் மீதி கதையாகும்.அரைத்த மாவையே அரைத்தாரா சுந்தர். சி?....'அரண்மனை 4' பட விமர்சனம் இதோ!

சுந்தர் சி இந்த படத்தில் இயக்குனரையும் தாண்டி ஹீரோவாகவும் பட்டையை கிளப்பி உள்ளார். நடிகை தமன்னா தனது நடிப்பினால் படம் முழுவதையும் தாங்கிப் பிடித்திருக்கிறார். ராஷி கண்ணாவிற்கு பலமான கதாபாத்திரம் இல்லை என்றாலும் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை கச்சிதமாக செய்து முடித்திருக்கிறார். மேலும் யோகி பாபு, சேஷு, விடிவி கணேஷ், கோவை சரளா, சந்தோஷ் பிரதாப் ஆகியோரும் தனக்கான கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து கைத்தட்டலை பெறுகின்றனர். படத்தில் VFX காட்சிகள், எடிட்டிங், ஒளிப்பதிவு ஆகியவை நன்றாக அமைந்துள்ளது. ஹிப் ஹாப் ஆதியின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்க்கின்றன. குஷ்பூ, சிம்ரன் ஆகியோரின் நடனம் வேற லெவலில் அமைந்திருந்தது. அரைத்த மாவையே அரைத்தாரா சுந்தர். சி?....'அரண்மனை 4' பட விமர்சனம் இதோ!மேலும் அச்சச்சோ பாடலும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இருப்பினும் படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் தொய்வுகளை ஏற்படுத்துகின்றன. அதே சமயம் ஓரிரு இடங்களில் காமெடிகள் ஒர்க் அவுட் ஆகவில்லை. ஆனாலும் சுந்தர் சி வழக்கம்போல் பழிவாங்கும் கதையை வைத்து அரைத்த மாவையே அரைக்காமல் சுவாரசியமான திரைக்கதையின் மூலம் ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளார். எனவே குடும்பத்துடன் சென்று பார்த்து ரசிக்கும் திரைப்படம் தான் அரண்மனை 4.

MUST READ