spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசுந்தர். சி, அனுராக் காஷ்யப் கூட்டணியின் 'ஒன் 2 ஒன்' ...... ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த...

சுந்தர். சி, அனுராக் காஷ்யப் கூட்டணியின் ‘ஒன் 2 ஒன்’ …… ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பு!

-

- Advertisement -

சுந்தர். சி தமிழ் சினிமாவில் இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் வலம் வருகிறார். அதே சமயம் பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப், படம் இயக்குவதில் மட்டுமல்லாமல் நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில் சுந்தர் சி மற்றும் அனுராக் காஷ்யப் கூட்டணியில் ஒன் 2 ஒன் என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் சுந்தர் சி ஹீரோவாக நடிக்க அனுராக் காஷ்யப் வில்லனாக நடிக்கிறார். சுந்தர். சி, அனுராக் காஷ்யப் கூட்டணியின் 'ஒன் 2 ஒன்' ...... ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பு!இந்த படத்தை கே திருஞானம் இயக்குகிறார். 24HRS புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு சித்தார்த் விபின் இசை அமைக்கிறார். பூபதி கார்த்திக் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து படமானது ரிலீசுக்கு தயாராகி வருகிறது.சுந்தர். சி, அனுராக் காஷ்யப் கூட்டணியின் 'ஒன் 2 ஒன்' ...... ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பு!

சில மாதங்களுக்கு முன்பாக இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பட குழுவினர் வெளியிட்டிருந்தனர். இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் இன்று மாலை 5 மணி அளவில் வெளியாகும் என்று பட குழுவினர் அறிவித்துள்ளனர். சிங்கம் சிறுத்தை எனும் பாடலை விஜய் சேதுபதி மற்றும் சுந்தர் சி ஆகிய இருவரும் பாடியுள்ளனர். மேலும் இந்த பாடலை இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ