spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசிம்பு பட உதவி இயக்குனர் மரணம்......திரையுலகினர் இரங்கல்!

சிம்பு பட உதவி இயக்குனர் மரணம்……திரையுலகினர் இரங்கல்!

-

- Advertisement -

சிம்பு பட உதவி இயக்குனர் மரணம் அடைந்த தகவல் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் 3ஆம் தேதி சிம்பு நடிப்பில் வெளியான படம் பத்து தல. இந்த படத்தை ஓபிலி என் கிருஷ்ணா இயக்கியிருந்தார். படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்த சரவணன் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.சிம்பு பட உதவி இயக்குனர் மரணம்!

we-r-hiring

அதாவது சில தினங்களுக்கு முன்பாக உதவி இயக்குனர் சரவணன்
உடல் நலக்குறைவு காரணமாக நீண்ட நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது அவரது உறவினர்கள் பண உதவி கேட்டு துபாயில் இருந்த நடிகர் சிம்புவை தொடர்பு கொள்ள முயற்சித்தனர். ஆனால் அப்போது சிம்புவை தொடர்பு கொள்ள முடியாமல் போனது. இருப்பினும் சரவணனின் உடல்நிலை குறித்த செய்தி அறிந்த நடிகர் சிம்பு உடனடியாக ஒரு லட்சம் ரூபாய் பண உதவி செய்தார். சிம்பு பட உதவி இயக்குனர் மரணம்!அதைத் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த உதவி இயக்குனர் சரவணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரின் மறைவு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதேசமயம் இவரின் மறைவிற்கு பத்து தல பட இயக்குனர் ஓபிலி என் கிருஷ்ணன் உள்ளிட்டோர் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

MUST READ