ரெட்ரோ படத்தின் ட்விட்டர் விமர்சனம்.
சூர்யாவின் 44 ஆவது படமாக உருவாகி இருக்கும் திரைப்படம் தான் ரெட்ரோ. இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்க படத்தில் பூஜா ஹெக்டே, ஜெயராம், கருணாகரன், பிரகாஷ்ராஜ், ஜோஜு ஜார்ஜ், நாசர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜ், சூர்யாவும் இணைந்து தயாரித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இதற்கு இசை அமைத்திருக்கிறார். கங்குவா படத்திற்கு பிறகு மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் இந்த படம் இன்று (மே 1) உலகம் முழுவதும் திரையிடப்பட்டுள்ளது. இந்த படத்தை காண ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்கிற்கு திரண்டு வருகின்றனர். அதேசமயம் இந்த படம் தொடர்பாக தங்களின் கருத்துக்களையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
#RETRO – Semma Massy Intro for #Suriya ..🔥⭐ His Screen Presence & SaNa’s BGM Brings the roof down in Theatre..🤩💥 Superb Atmosphere..🤝
— Laxmi Kanth (@iammoviebuff007) May 1, 2025
அதன்படி ரசிகர் ஒருவர், “ரெட்ரோ படத்தில் சூர்யாவின் இன்ட்ரோ செம மாஸாக இருக்கிறது. சூர்யா வரும் காட்சிகளும், சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசையும் திரையரங்கையே வியப்பில் ஆழ்த்துகிறது. அருமையாக இருக்கிறது” என்று தன்னுடைய கருத்தை தெரிவித்து இருக்கிறார்.
#Retro – Kanimaa & the entire 15mins single shot was just lit & well executed 🔥🔥
Dance + Action + Emotional scenePerformer #Suriya has just peaked👏👏 pic.twitter.com/rRV8nd0Z2U
— AmuthaBharathi (@CinemaWithAB) May 1, 2025
மற்றுமொரு ரசிகர், “கனிமா பாடலும், 15 நிமிட சிங்கிள் ஷாட் சீனும் முழுமையாக ஜொலிக்கிறது. டான்ஸ், ஆக்சன், எமோஷனல் காட்சி ஆகியவை சிறப்பாக செயல்படுத்தப்பட்டு இருக்கிறது. சூர்யா தனது நடிப்பினால் உச்சத்தை தொட்டிருக்கிறார்” என்று தன்னுடைய பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
– Paari – Rumini 👏👏👏 Super Scene 💥
– #Suriya & #PoojaHegde Acting Super 😍
– #Sana Background Music 🎵 📈 #RETRO pic.twitter.com/6QoObvwB1N— Movie Tamil (@MovieTamil4) May 1, 2025
வேறொரு ரசிகர், “பாரி – ருக்மிணி வரும் காட்சி சூப்பர். சூர்யா, பூஜா ஹெக்டே நடிப்பு சூப்பர். சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை சூப்பர்” என்று தன்னுடைய விமர்சனத்தை பகிர்ந்துள்ளார்.