- Advertisement -
மகாதேவ் செயலி சூதாட்ட வழக்கில் நடிகை தமன்னா நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், அவர் அதை தட்டிக்கழித்து அரண்மனை பட புரமோசனில் ஈடுபட்டுள்ளார்.

நடிகை தமன்னா கடந்த 2023-ம் ஆண்டில் ஐபிஎல் போட்டிகளை மகாதேவ் என்ற செயலியில் சட்டவிரோதமாக ஒளிபரப்பப்பட்ட விவகாரத்தில், நடிகை தமன்னாவுக்கு சைபர் கிரைம் சம்மன் அனுப்பியது. அதில், நடிகை தமன்னா நேரில் விசாரணை ஆஜராகும்படி மும்பை கிரைம் போலீசார் சம்மன் அனுப்பி இருக்கிறது. இந்த செயலியின் விளம்பரத்தில் நடித்திருந்தார். இந்த மோசடி தொடர்பான வழக்கு வேகமெடுத்திருக்கும் நிலையில், பாலிவுட் நடிகர் சாஹில் கான் கைது செய்யப்பட்டு உள்ளார். இதையடுத்து, நடிகர் நடிகைகள் ஷ்ரத்தா கபூர், ரன்பீர் கபூர், ஹூமா குரேஷி, தமன்னா உள்ளிட்ட பலருக்கு சிக்கல் எழுந்துள்ளது.


அந்த வகையில் மகாதேவ் செயலியின் துணை செயலியான பேர்பிளே செயலியில் ஏற்பட்ட மோசடி வழக்கு தொடர்பான விசாரணைக்கு நேற்று நேரில் ஆஜராக தமன்னாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், அவர் ஆஜராகவில்லை. மாறாக அந்த தேதியில் தான் மும்பையில் இல்லை என்றும், வெறொரு நாளில் விசாரணைக்கு வருவதாகவும் தமன்னா தெரிவித்துள்ளார். அதன்படி அடுத்த மாதம் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் அரண்மனை 4-ம் பாகத்தின் புரமோசன் பணியில் அவர் ஈடுபட்டு உள்ளார்.



