நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்திருக்கிறார். இவர் சில வருடங்களுக்கு முன்பு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்ட நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சில வருடங்களிலேயே விவாகரத்து பெற்றுக் கொண்டு இருவரும் தெரிந்து சென்றனர். அதன் பிறகு நாக சைதன்யா, நடிகை சோபிதா துலிபாலாவை திருமணம் செய்யப் போவதாக தகவல் வெளியானது. இவர்கள் இருவருக்கும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நிச்சயதார்த்தமும் நடைபெற்றது. இந்நிலையில் தெலுங்கானா அமைச்சர் கொண்டா சுரேகா, கே.டி. ராமாராவ் குறித்தும் நாக சைதன்யா – சமந்தாவின் விவாகரத்து விவகாரம் குறித்தும் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்திருந்தார். அதாவது கொண்டா சுரேகா, சமந்தா – நாக சைதன்யா விவாகரத்தினை கே.டி. ராமாராவுடன் தொடர்புபடுத்தி பேசியிருந்தது சர்ச்சைகளை கிளப்பியது. அதைத் தொடர்ந்து திரை பிரபலங்கள் பலரும் தெலுங்கானா அமைச்சர் கொண்டா சுரேகாவிற்கு தங்களின் கண்டனங்களை தெரிவித்து வந்தனர். மேலும் நடிகை சமந்தாவும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் கொண்டா சுரேகா சமந்தா விட மன்னிப்பு கோரி பதிவு ஒன்றினையும் வெளியிட்டிருந்தார்.
Respect boundaries, maintain dignity. Baseless allegations are intolerable, especially when made by public officials!#FilmIndustryWillNotTolerate
— rajamouli ss (@ssrajamouli) October 3, 2024
இந்நிலையில் பிரபல இயக்குனர் ராஜமௌலி தனது சமூக வலைதள பக்கத்தில், “எல்லைகளை மதிக்க வேண்டும். கண்ணியத்தை பராமரிக்க வேண்டும். பொது அதிகாரிகள் செய்யும்போது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் பொறுத்துக் கொள்ள முடியாதது” என்று பதிவிட்டு கொண்டா சுரேகாவின் சர்ச்சை பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.