நடிகர் அஜித் அமர்க்களம் திரைப்படத்தின் போது நடிகை ஷாலினியை காதலித்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இருவருக்கும் அனுஷ்கா, ஆத்விக் என இரு குழந்தைகள் இருக்கிறார்கள்.
மேலும் இவர் துணிவு படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு தனது 62 ஆவது படமான விடாமுயற்சி திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டானார். மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே 70% நிறைவடைந்த நிலையில் இதன் இறுதி கட்ட படப்பிடிப்பு விரைவில் அஜர்பைஜானில் நடைபெற இருக்கிறது. இதற்கிடையில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி எனும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார் அஜித். அடுத்ததாக நடிகர் அஜித், சிறுத்தை சிவா இயக்கத்தில் புதிய படம் ஒன்றிலும் மோகன் ராஜா இயக்கத்தில் புதிய படம் ஒன்றிலும் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்று சமீப காலமாக செய்திகள் பரவி வருகிறது.
எனவே இவ்வாறு பிசியான நடிகராக வலம் வரும் அஜித் தனது குடும்பத்துடன் நேரம் செலவிடுவதை தவறவிடுவதில்லை. அதன்படி மகன் ஆத்விக் பள்ளிக்கு சென்று விழாக்களில் கலந்து கொள்வது போன்று தனது குழந்தைகளுடனும் நேரம் செலவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தனது மகனுடன் அஜித் கிரிக்கெட் விளையாடும் புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.