Homeசெய்திகள்சினிமாதளபதி 69 திரைப்படம் கைவிடப்பட்டதா? ........காரணம் இது தானா?

தளபதி 69 திரைப்படம் கைவிடப்பட்டதா? ……..காரணம் இது தானா?

-

- Advertisement -

நடிகர் விஜய் தற்போது வெங்கட பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி உள்ள இந்த படம் செப்டம்பர் 5ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையிடப்பட உள்ளது. தளபதி 69 திரைப்படம் கைவிடப்பட்டதா? ........காரணம் இது தானா?இதற்கிடையில் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி 2026 சட்டமன்ற தேர்தலில் தான் போட்டியிட இருப்பதாகவும் தளபதி 69 படம் தான் தனது கடைசி படம் எனவும் அறிவித்துள்ளார். எனவே தளபதி 69 படத்தை யார் இயக்கப் போகிறார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்த நிலையில் ஹெச். வினோத் தான் இயக்கப் போகிறார் என்று சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது. ஆனால் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்க போவதாகவும் இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்க போவதாகவும் தொடர்ந்து பல தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. எனவே அடுத்ததாக விஜய் தி கோட் படத்தை முடித்துவிட்ட நிலையில் ஹெச். வினோத் இயக்கத்தில் தளபதி 69 படம் விரைவில் தொடங்கப் போகிறது என்று சொல்லப்பட்டு வந்தது. தளபதி 69 திரைப்படம் கைவிடப்பட்டதா? ........காரணம் இது தானா?ஆனால் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் ஹெச். வினோத், கார்த்தி நடிப்பில் தீரன் அதிகாரம் இரண்டு திரைப்படத்தை தான் இயக்கப் போகிறார் தளபதி 69 திரைப்படம் கைவிடப்பட்டதாக புதிய தகவல்கள் சமூக வலைதளங்களில் உலா வருகின்றன. இருப்பினும் தளபதி 69 திரைப்படம் கைவிடப்பட்டதா? அல்லது விரைவில் தொடங்க இருக்கிறதா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

MUST READ