Homeசெய்திகள்சினிமாஅனல் பறக்கும் 'தளபதி 69' படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அனல் பறக்கும் ‘தளபதி 69’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

-

தளபதி 69 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.அனல் பறக்கும் 'தளபதி 69' படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

நடிகர் விஜய் நடிப்பில் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் கோட் எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தினை வெங்கட் பிரபு இயக்கி இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அதைத்தொடர்ந்து நடிகர் விஜய் தளபதி 69 எனும் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். நடிகர் விஜய் தற்போது அரசியல்வாதியாக உருவெடுத்துள்ளதால் தனது 69 வது திரைப்படம் தான் கடைசி படம் என அறிவித்திருக்கிறார். நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தது ரசிகர்களுக்கு ஒரு பக்கம் உற்சாகத்தை தந்தாலும் சினிமாவில் இருந்து அவர் விலகுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் அன்று முதல் இன்று வரை தளபதி விஜய் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர். இந்த நிலையில் தான் தளபதி 69 படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதன்படி இந்த படத்தினை இயக்குனர் ஹெச். வினோத் இயக்க இருக்கிறார். கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் படத்தினை மிகவும் பிரம்மாண்டமாக தயாரிக்க இருக்கிறது. அனல் பறக்கும் 'தளபதி 69' படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!இந்த படத்தில் விஜய் தவிர யார் யார் நடிக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் இருந்து வருகிறது. இந்நிலையில் தளபதி 69 படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. படக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பு போஸ்டரில் படத்திற்கு அனிருத் இசை அமைக்க போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் படமானது 2025 அக்டோபரில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ