- Advertisement -
நடிகர் விஜய் புதிதாக சொகுசு கார் வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அன்றும், இன்றும், என்றும் தளபதியாக கொண்டாடப்படுபவர் நடிகர் விஜய். ஆரம்பத்தில் இளைய தளபதியாக கொண்டாடப்பட்டவர், தற்போது தளபதியாக ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அவருக்கு ரசிகர்கள் கோடிக்கணக்கில் உள்ளனர். தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னட மொழியிலும் விஜய்க்கு ரசிகர்கள் ஏராளம் உள்ளனர். இதுவரை 60-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள நடிகர் விஜய் இறுதியாக லியோ படத்தில் நடித்திருந்தார். இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார்.


தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து வருகிறார். இது விஜய்யின் 68-வது திரைப்படமாகும். இதில் சினேகா, மீனாட்சி சௌத்ரி, பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், லைலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசை அமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆரம்பத்தில் வௌிநாடுகளில் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. தொடர்ந்து தற்போது சென்னையில் நடைபெறுகிறது



