பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் தான் தங்கலான். இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்திருக்கிறார். ஜி.வி. பிரகாஷ் படத்திற்கு இசையமைத்துள்ளார். கிஷோர் குமார் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். இந்தப் படத்தில் விக்ரம், பார்வதி, பசுபதி, மாளவிகா மோகனின் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் படும் அவதியை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. நடிகர் விக்ரம், சேது, காசி, பிதாமகன் போன்ற படங்களை போல் இந்த படத்திலும் வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்த நிலையில் தற்போது படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஆகையினால் இந்த படமானது வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தின் டீசர், ட்ரெய்லர், ஃபர்ஸ்ட் சிங்கள் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்தது. அடுத்ததாக இந்த படத்தின் 2வது பாடல் வெளியாக இருக்கிறது. இன்று (ஆகஸ்ட் 2) லானே தங்கலானே எனும் இரண்டாவது பாடல் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் தங்கலான் படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெற இருப்பதாகவும் அந்த போஸ்டரில் குறிப்பிட்டுள்ளனர்.