கிஷன் தாஸின் தருணம் பட டீசர் வெளியீடு
- Advertisement -
கிஷன் தாஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் தருணம் திரைப்படத்தின் முன்னோட்டம் தற்போது வெளியாகி உள்ளது.

பிரபல யூ டியூபர் கிஷன் தாஸ். இன்றைய காலத்திற்கு ஏற்ப இன்ஸ்டாகிராமில் அடுத்தடுத்து புதுப்புது கண்டெட்டுகளை பதிவிட்டு அதிக அளவில் ரசிகர்களை கொண்டிருக்கிறார். மேலும், பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் தளத்தில் இவர் ஒரு நிகழ்ச்சி ஒன்றின் தொகுப்பாளராகவும் பணியாற்றி இருக்கிறார். கிஷன் தாஸ், முதலும் நீ முடிவும் நீ என்ற படத்தின் மூலமாக நாயகனாக அறிமுகமாகினார். கடந்த 2022ம் ஆண்டு வெளியான இத்திரைப்படத்தை தர்பூகா சிவா என்பவர் இயக்கினார்.

தனது முதல் படத்திலேயே ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற கிஷன் தாஸ், அடுத்ததாக ஒப்பந்தமான திரைப்படம் தருணம். தேஜாவு படத்தின் இயக்குனர் அரவிந்த் ஸ்ரீனிவாசன் இந்த படத்தை இயக்குகிறார். இதில் கதாநாயகனாக கிஷன் தாஸ் நடிக்க, நடிகை ஸ்ருமிதி வெங்கட் கதாநாயகியாக நடிக்கிறார். , மூக்குத்தி அம்மன் மற்றும் மாறன் ஆகிய படங்களை அடுத்து இந்தப் படத்தில் ஸ்மிருதி இணைந்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூன் மாதம் பூஜையுடன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. தற்போது படத்தின் பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. அதே சமயம் தற்போது தருணம் படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.