பிரபல மலையாள நடிகர் வினோத் தாஸ் காரிலிருந்து பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.
மலையாள சினிமாவில் ஐயப்பனும் கோஷியும், குறி, ஜூன், ஹேப்பி வெட்டிங்ஸ், நாதொலி ஒரு சிறிய மீனல்ல உள்ளிட்ட படங்களின் மூலம் பிரபலமானவர்தான் வினோத் தாமஸ். இவர் நேற்று இரவு அவரது காரினுள் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். கேரளாவில் உள்ள கோட்டையம் பகுதியைச் சேர்ந்த வினோத் தாமஸ் 47 வயது நிரம்பியவர். இவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர். வினோத் தாமஸ் நேற்று காலை 8:30 மணி அளவில் மது அருந்துவதற்காக மதுக்கடைக்கு சென்றுள்ளார். நீண்ட நேரமாக மது கடையில் இருந்த இவர், அளவுக்கு அதிகமாக மது அருந்தியுள்ளார். அதன் பிறகு வீடு திரும்புவதற்காக காரில் ஏறிய வினோத் தாமஸ் கார் கண்ணாடிகளை மூடிவிட்டு காரிலேயே நீண்ட நேரமாக அமர்ந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் கார் நீண்ட நேரமாக நின்று கொண்டிருப்பதையும், உள்ளே ஒருவர் இருப்பதையும் கவனித்து போலீசாருக்கு புகார் தெரிவித்துள்ளனர்.
அதன் பிறகு கார் கண்ணாடியை உடைத்து சுயநினைவின்றி கிடந்த வினோத் தாமஸை அருகில் இருக்கும் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு வினோத் தாமஸை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். வினோத் தாமஸின் மரணம் இயற்கையான முறையில் ஏற்பட்ட மரணமா? அல்லது வேறு ஏதும் காரணம் இருக்கிறதா? என்பது குறித்து போலீசார் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் கேரள மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.