நடிகர் சூர்யா கடைசியாக எதற்கும் துணிந்தவன், கமல்ஹாசனின் விக்ரம் போன்ற படங்களில் நடித்திருந்தார். அடுத்ததாக இவர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் 2024 அக்டோபர் 10-ல் வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் நடிகர் சூர்யா, பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா 44 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சூர்யாவும் கார்த்திக் சுப்பராஜும் இணைந்து தயாரிக்கும் நிலையில் சந்தோஷ் நாராயணன் இதற்கு இசை அமைக்கிறார். ஸ்ரேயா கிருஷ்ணா படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.
கடந்த மே மாதம் அந்தமானில் தொடங்கப்பட்ட சூர்யா 44 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்ததாக செய்திகள் வெளியானது. இதில் சூர்யா தவிர பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், கருணாகரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். மேலும் இந்த படத்தில் உறியடி விஜய்குமார் வில்லனாக நடித்து வருகிறார் என்று சொல்லப்பட்டது. அதன்படி கிட்டத்தட்ட 8 நாட்கள் உறியடி விஜய்குமாரின் பகுதிகள் படமாக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
ஆனால் கார்த்திக் சுப்பராஜுக்கும் உறியடி விஜய்குமாருக்கும் இடையில் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணமாக உறியடி விஜய்குமார் சூர்யா 44 படத்திலிருந்து விலகி விட்டதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமில்லாமல் உறியடி விஜய் குமார் தவிர இன்னும் நான்கு பேர் வில்லன்களாக நடிக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. இருப்பினும் மீண்டும் உறியடி விஜயகுமார் சூர்யா 44 இல் இணைவாரா அல்லது அவருக்கு பதிலாக வேறொரு நடிகரை நடிக்க வைக்கப் போகிறார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
- Advertisement -