பிரபல இயக்குனர் மணிரத்னம் கடைசியாக பொன்னியின் செல்வன் 1, 2 போன்ற படங்களை இயக்கியிருந்தார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டிருந்த இந்த இரண்டு படங்களுமே வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து மணிரத்னம், கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் கூட்டணியில் தக் லைஃப் எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் மணிரத்னம், கௌதம் கார்த்திக், துளசி, அர்ஜுன், அரவிந்த்சாமி, பசுபதி, பொன்வண்ணன் ஆகியோரின் நடிப்பில் கடல் எனும் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகை சோனம் கபூரை நடிக்க வைக்க மணிரத்னம் திட்டமிட்டு இருந்த நிலையில் சோனம் கபூரிடமும் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
ஆனால் மொழி போன்ற ஒரு சில காரணங்களால் சோனம் கபூர் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க மறுத்துவிட்டார் என்ற தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றனர். இந்த தகவல் இந்த ரசிகர்கள் பலரும் மணிரத்னம் படத்தில் படிக்க வாய்ப்பு கிடைப்பதே பெரிய விஷயம் இதை சோனம் கபூர் நழுவ விட்டுட்டாரே! என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
பாலிவுட் நடிகை சோனம் கபூர் ஏற்கனவே தனுஷ் நடிப்பில் தமிழ் மற்றும் இந்தி மொழியில் வெளியான ராஞ்சனா திரைப்படத்தில் நாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.