spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஒரு நாள் மட்டும் சூர்யாவை கேட்ட ரசிகை..... ஜோதிகாவின் பதில் என்ன?

ஒரு நாள் மட்டும் சூர்யாவை கேட்ட ரசிகை….. ஜோதிகாவின் பதில் என்ன?

-

- Advertisement -

நடிகை ஜோதிகா, வாலி படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கியவர். அதை தொடர்ந்து நடிகர் சூர்யாவுடன் இணைந்து பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் நடித்திருந்தார். அந்த சமயத்திலேயே சூர்யாவும் ஜோதிகாவும் நெருங்கி பழகி வந்ததாக சொல்லப்படுகிறது.ஒரு நாள் மட்டும் சூர்யாவை கேட்ட ரசிகை..... ஜோதிகாவின் பதில் என்ன? பின்னர் இருவரும் இணைந்து மாயாவி, பேரழகன், காக்க காக்க, சில்லுனு ஒரு காதல் என்ன பல படங்களில் இணைந்து பணியாற்றி இருக்கின்றனர். மேலும் கடந்த 2006இல் இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில் இருவருக்கும் தியா மற்றும் தேவ் இரு குழந்தைகள் இருக்கின்றனர். திருமணத்திற்கு பின் திரைத் துறையில் இருந்து சில காலம் விலகியிருந்த ஜோதிகா 36 வயதினிலே படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். அதன் பின் மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். அதேசமயம் தீவிர உடற்பயிற்சி மேற்கொண்டு தன்னை மேன்மேலும் மெருகேற்றி வருகிறார். இந்நிலையில் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்து வரும் ஜோதிகாவிடம் ரசிகை ஒருவர், “ஜோதிகா மேடம் நான் சூர்யாவின் தீவிர ரசிகை நீங்கள் சில்லுனு ஒரு காதல் படத்தில் செய்ததைப் போல் ஒரு நாள் மட்டும் சூர்யாவை என்னிடம் தர முடியுமா?” என்று கேட்டிருந்தார். ஒரு நாள் மட்டும் சூர்யாவை கேட்ட ரசிகை..... ஜோதிகாவின் பதில் என்ன?அதற்கு ஜோதிகா, ” நிச்சயமாக முடியாது” என்று பதிலளிக்க அந்த ரசிகை மீண்டும் ” சூர்யா உங்களுடையவர். நீங்கள் ரிப்ளை செய்ததே எனக்கு மகிழ்ச்சி” என்று தெரிவித்துள்ளார். இவர்களின் இந்த உரையாடல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

MUST READ